×

மாநில அளவிலான யோகா போட்டி சுரண்டை எஸ்ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை

சுரண்டை, ஜன.30:  மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில்  நடைபெற்ற மாநில அளவிலான யோகா  போட்டியில் சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இப்போட்டியில் மாணவர்கள் சதிஷ், துகில் ஆகியோர் இரண்டம் பரிசும், ஜோஸ்வா பீட்டர், கபில், முத்தமிழ்
செல்வன் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவப்பிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி ஆகியோா் பாராட்டினர்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு