×

தென்காசியில் மாவட்ட ஆணழகன் போட்டி

தென்காசி, ஜன. 30:  தென்காசியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. பாரத் உடற்பயிற்சி கழகத்தின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் நடந்த போட்டிக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். மாஸ்டர் குத்தாலிங்கம் வரவேற்றார். அலங்கார் ஈஸ்வரராஜ், சுப்பிரமணியன், மாவட்ட ஆணழகன் சங்க துணை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் 50 கிலோ எடை பிரிவு முதல் 85 கிலோவுக்கு மேல் வரை எடை பிரிவில் போட்டிகள் நடந்தது.  ஆண்கள் பிசிக் போட்டிகளும் நடந்தது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கடையநல்லூர் நேஷனல் ஜிம் பெற்றது. சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை பவர் பிட்னஸ் ஸ்டுடியோ வீரர் பேச்சிமுத்து மிஸ்டர் தென்காசி 2020 பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டி பேசினார்.

தமிழ்நாடு மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் திருவேங்கடம், நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் நாராயணன், தூத்துக்குடி மாவட்ட சங்க செயலாளர் தமிழரசன், சென்னை கப்பல் துறை பரந்தாமன், ஆறுமுகம்
ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். அலங்கார் மனக்காவலன், வேணுகோபால், ராமசாமி, மீரான் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் அப்துல் அஜீஸ், டாக்டர் ஹாஜா மொகிதீன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கு சிறந்த சமூக சிந்தனையாளர் விருதும், வாத்தியார் முருகன் மற்றும் மாஸ்டர் குத்தாலிங்கம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாஸ்டர் முருகன் நன்றி கூறினார்.

Tags : District Contestant Competition ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...