×

நெல்லை டவுன் சாலையில் பாதாள சாக்கடை உடைப்பு சீரமைப்பு

நெல்லை, ஜன. 30: நெல்லை டவுன் சாலையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று காலையில் சரிசெய்யப்பட்டது. நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கின்றன. இச்சாலையில் உள்ள தியேட்டருக்கு முன்பாக பாதாள சாக்கடையில் கடந்த ஒருமாதமாக உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் சாலையின் இருமருங்கிலும் தேங்கியதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.

பஸ்கள் சாலையில் சென்றபோது கழிவுநீர் பாதசாரிகள் மேல் தெறித்து வந்தது. இதுகுறித்து தினகரனில் நேற்று செய்தி வெளியானது. சாலையில் உள்ள உடைப்பை சரி செய்து வாகனங்கள் சீராக செல்ல வழிவகுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக நேற்று அதிகாலையில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து, சாலைக்கு கழிவுநீர் வராத வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும் பாதாள சாக்கடை மூடிகளை திறந்து கழிவுகளை அகற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags : Paddy Town Road ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி