×

நெல்லை அருகே தங்கை வீட்டில் நகை திருடிய அண்ணன் கைது

நெல்லை, ஜன.30:  சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளத்தில் தங்கை வீட்டில் 9 பவுன் நகை திருடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளம் அந்தோனிநகர் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் முருகன்-பாப்பா ஆகியோரின் மகள் வெண்ணிலா(27). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் வெண்ணிலா தனது தாயுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த அக்.11 ம் தேதி வெண்ணிலா வேலைக்கு சென்ற நிலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோ மீது இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 70 கிராம் தங்க நகையை திருடிச்சென்றுள்ளார்.
 இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வந்தனர். விசாரணையில் புதிதாக வேறு கைரேகை ஏதும் பதிவாகாமல் இருந்ததால் போலீசாரின் பார்வை வெண்ணிலாவின் அண்ணன் ரவி (33) மீது திரும்பியது.

ரவி திருமணம் முடிந்து சிவந்திபுரத்தை அடுத்த அடையகருங்குளத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று ரவி வெண்ணிலாவின் வீட்டிற்கு வந்து சென்றதை போலீசார் உறுதிசெய்தனர்.
இதனையடுத்து சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப் ஆலோசனையின் படி தனிப்படையினர் ரவியை பிடித்து தங்களுக்குரிய பாணியில் விசாரித்தனர். இதில் நகை திருடியதை ரவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ வள்ளிநாயகம் ஆகியோர் வழக்குபதிந்து ரவியை கைது செய்து அவரிடமிருந்த 70 கிராம் நகையை  மீட்டனர்.

Tags : jewelery ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!