×

பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு 2 பெண்களை பிடித்து விசாரணை

நெல்லை, ஜன. 30:  பாவூர்ச்சத்திரம் அருகே உள்ள கரிசலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வக்கனி(75). இவர் நேற்று காலை பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது மகளான திப்பணம்பட்டியை சேர்ந்த பொன்சொர்ணத்தை அழைத்துக்கொண்டு அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்துள்ளது.  இந்நிலையில் ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதியில் பேருந்து வந்து போது செல்வக்கனி தான் அணிந்திருந்த 3 பவுன் செயின் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

இதனையடுத்து ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த ஆலங்குளம் போலீசார் பஸ்சை சோதனை நடத்தினர்.  தொடர்ந்து  பஸ் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையில் 2 பெண்கள் மறைந்திருந்தனர். அவர்களை பார்த்த செல்வக்கனி போலீசாரிடம் இவர்கள் தான் என் அருகில் நின்றனர் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில்  இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிக்கப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Investigators ,
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி...