×

மின்நுகர்வோர் குறைகளை உடனே சரி செய்ய வேண்டும்

ஓமலூர், ஜன.30: மின்நுகர்வோர் குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது. ஓமலூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தின் சார்பில், மின்சார வாரியத்திற்கு வருவாயை பெருக்குதல், பணியாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுதல் மற்றும் மின்சார வாரிய நுகவோர்களை திருப்தியடைய செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

 உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சரவணகுமார், ஹரிபாஸ்கர், நாராயணசாமி மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். ஓய்வுபெற்ற அலுவலர் ஜெயராமன், சரியான முறையில், மின் மீட்டர்களை ஆய்வு செய்தல், மின் கட்டணங்களை நிர்ணயித்தல் போன்ற மின்சார வாரிய வருவாய்களை பெருக்கும் முறைகள் குறித்து விளக்கினார். மேலும், மின்சார பாதைகளில் பாதுகாப்பாக வேலை செய்தல், மின் நுகர்வோர்களை திருப்திபடுத்தும் வகையில் செயல்படுதல் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார். வீடுகள் மற்றும் நிறுவனங்கள், கடைகளில் மின்சார பயன்பாடுகளை ஆய்வுகள் செய்வது. மின்சார மீட்டர்கள் முறையாக இயங்குகிறதா என்பது குறித்து அய்வு செய்தல் போன்றவை குறித்தும் பேசினார்.

மேலும், நுகர்வோருக்கு எப்போதும் துணையாக இருந்து பணியாற்ற வேண்டும். அவர்கள் கூறும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தில் குறைபாடுகள் இல்லாமல் முறையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் கள உதவியாளர் முதல் முகவர் வரையிலான களப்பணியாளர்கள், மின் மீட்டர் கணக்கீட்டார்ளர்கள் முதல் வருவாய் மேற்பார்வையாளர்கள் வரையிலான எழுத்துத்துறை பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு