×

பனமரத்துப்பட்டியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சேலம், ஜன.30:சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை மறுநாள் (1ம் தேதி) காலை 10 மணியளவில், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் உள்ள சேலம் பாலிடெக்னிக் கல்லூரியில், தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 8ம் வகுப்பு முதல், பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற ஆண், பெண் இருபாலரும், கலந்து கொள்ளலாம். கல்விச் சான்றிதழின் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிரும், இதில் கலந்து கொண்டு பயனடையலாம். இத்தகவலை கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Employment Camp for Youth ,Panamaratpatti ,
× RELATED பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 24 கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு