×

மாவட்டத்தில் 9.72 லட்சம் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு

சேலம், ஜன.30: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு அடிப்படையில், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஒரு குடும்பத்திற்கு ₹1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பரிசு வழங்கப்பட்டது.  அத்துடன், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை,  1,577 நியாயவிலைக் கடைகளில் உள்ள 9,72,118 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. சுமார் ₹14.68 கோடி மதிப்பீட்டில் 9,72,118 கிலோ பச்சரிசி, 9,72,118 கிலோ சர்க்கரை, 9,72,118 இரண்டு அடி நீளக் கரும்பு துண்டு, 19,443.76 கிலோ முந்திரி, 19,443.76 கிலோ திராட்சை, 4,860.94 கிலோ ஏலக்காய்  வழங்கப்பட்டது. இதுதவிர ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹1,000 என ₹97.21 கோடி ரொக்கம் வழங்கப் பட்டது. மொத்தமாக, மாவட்டம் முழுவதும் ₹111.89 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 17.20 லட்சம் விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : families ,district ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை