×

ஓசூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் செண்டுமல்லி விலை சரிவு

ஓசூர், ஜன.30: ஓசூர் பகுதியில் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி அதிகரிப்பால் விலை சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஒசூரில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்பநிலை நிலவுவதால், 350 ஹெக்டேர் பரப்பளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமணம் மற்றும் கோயில் விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செண்டுமல்லி, ஒரு வாரம் வரை வாடாது என்பதாலும், சாகுபடி செலவு குறைவு என்பதாலும், ஓசூர் பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் செண்டுமல்லி பூ சாகுபடி செய்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் செண்டுமல்லி சாகுபடி செய்ய ₹50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ செண்டுமல்லி ₹10க்கு விற்பனையாகிறது. மேலும் விசேஷ நாட்கள் இல்லாத நிலையில் தற்போது பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது,’ என்றனர்.

போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர் முகாம்

போச்சம்பள்ளி, ஜன.30: போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.  போச்சம்பள்ளி  தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும்  முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர்  தெய்வநாயகி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் அலுவலர் மகிழ்ந்தன் முன்னிலை வகித்தார். தாசில்தார்  முனுசாமி, தனி தாசில்தார் குமரவேல், வருவாய் ஆய்வாளர் அருள், கிராம நிர்வாக  அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், சுற்றுவட்டார  கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு உபகரணங்கள்,  உதவி தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் 60 மனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து