×

ஜம்புகுடப்பட்டியில் மயிலான் திருவிழா

போச்சம்பள்ளி, ஜன.30: போச்சம்பள்ளி அருகே ஜம்புகுடப்பட்டி கிராமத்தில் மயிலான் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி அருகே ஜம்புகுடப்பட்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகை முடிந்து விவசாயம் செழிக்க வேண்டி, முருகன் வாகனமான மயிலான் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று மயிலான் திருவிழா துவங்கியது. இதனையொட்டி, மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோயில் சுவாமி சிலைகளை அலங்கரித்து, பழங்கால முறைப்படி பக்தர்கள் தோள் மீது சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வீதி உலாவாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் உணவு சமைத்து, ஆஞ்சநேயர் கோயிலில் படைத்தனர்.

பக்தர்கள் படைத்த உணவை, மயில்கள் வந்து சாப்பிட்டு செல்லும் என்பது ஐதீகம். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் பெங்களூரு, பாண்டிசேரி, திருப்பூர், சென்னை போன்ற வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள், மயிலான் திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜாகவுண்டர் சத்தியசீலன், மந்திரிகவுண்டர் காந்தி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


விநோத வழிபாடு

ஜம்புகுடப்பட்டி கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் நடந்து, கணவன் வரும் மணமகளை, அந்த கிராமத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றால், சுவாமிக்கு விளக்கேற்றி வைத்த எண்ணை திரியில் உள்ள நெருப்பை கொண்டு, அந்த பெண்ணின்  நாக்கில் சுடுவது வழக்கம். அப்போது தான் அந்த பெண் அந்த கிராமத்திற்கு சொந்தமானவள் ஆகிறார் என்பது இங்குள்ள மக்களின் விநோத நம்பிக்கையாக உள்ளது.

Tags : Peacock Festival ,
× RELATED மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து...