×

தேன்கனிக்கோட்டை அருகே புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டுக்கு திறப்பு

தேன்கனிக்கோட்டை, ஜன.30: தேன்கனிக்கோட்டை அருகே கக்கதாசம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை தளி.பிரகாஷ் எம்எல்ஏ பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை அருகே கக்கதாசம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நீண்ட நாட்களாக குறைந்த அழுத்த மின் வினியோகம் இருந்தது. இதனால் மின் மோட்டார்கள் இயக்க முடியாத நிலை இருந்தது. மேலும், மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வந்தன. இது குறித்து கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், மின்வாரிய அதிகாரிகளிடம் கூறி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க தளி பிரகாஷ் எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டார்.  இதை தொடர்ந்து, மின் வாரிய அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். இதை தளி.பிரகாஷ் எம்எல்ஏ நேற்று, மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் சீனிவாசலுரெட்டி, கக்கதாசம் ஊராட்சி தலைவர் முனிரெட்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் அனுராதாசீனிவாசன், முனியப்பா, கண்ணன், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி பொறியாளர்கள் பாபு, மாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : transformer utility ,Thenkanikottai ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது