×

ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி

தர்மபுரி, ஜன.30:  தர்மபுரி மாவட்டத்தில், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் நிதியின் கீழ்,  மாநில ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தவும், இலக்கண பிழையின்றி மாணவர்கள் வாசிக்கவும், பேசவும், இயல்பாக பேசுவதில் ஏற்படும் குறைகளை களைவதற்காகவும், ஆங்கில பாடத்தில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி, பட்டதாரி ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி நேற்று தர்மபுரியில் நடந்தது.

அரூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: பொதுதேர்வுக்கு தயாராகும் நேரத்தில், நீங்கள் எடுக்கும் முயற்சி மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும். நம் மாவட்டத்தை பொறுத்தவரை, ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் கூட காலி இல்லை. எனவே, உங்கள் அனுபவங்களை கொண்டு உங்களிடம் கற்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் எளிதாக 100 சதம் மதிப்பெண் பெற வைக்க முடியும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களிடையே தேர்வு அச்சத்தை போக்கி, தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நம் மாவட்டத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 96 சதவீதம் ஆகும். ஒரு சதவீத தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலே, தமிழக அளவில் முதல் 10 இடத்திற்குள் வந்துவிடுவோம். ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றால், கூடுதலாக ஒரு சதவீத தேர்ச்சி அதிகரிப்பு சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். இப்பயிற்சியில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேலு, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் மற்றும் 775 பட்டதாரி ஆசிரியர்கள், 115 முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்