×

குப்பைகளை எரிப்பதால் புகை மண்டலம்

விருதுநகர், ஜன.30:  விருதுநகர் வழிசெல்லும் நான்குவழிச்சாலையில், சிவகாசி பாலம் முதல் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இடையே சாலையோரத்தில் தனியார் ஓட்டல் குப்பைகள், வாகன பழுது பார்ப்பு மைய கழிவுகள், பாவாலி ஊராட்சி குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. நான்கு வழிச்சாலை ஓரத்தில் எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் வாகன ஓட்டிகளை கடுமையாக பாதித்து வருகிறது. தினசரி காலை 6 மணி துவங்கி மாலை வரை எரிக்கப்படுகிறது. எரிக்கப்படும் குப்பைகள் முழுமையாக அணைக்கப்படுவதில்லை. அதனால் புகை இரவு பகலாக தொடர்ந்து வெளியேறி வருகிறது. நான்குச்சாலை மற்றும் சர்வீஸ் ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் கண் எரிச்சல் மற்றும் சுவாச நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்பாக நான்கு வழிச்சாலை ஓரத்தில் கழிவுகள், டயர்கள், பாவாலி ஊராட்சி குப்பைகளை கொட்டி எரிப்பதை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : smoke zone ,
× RELATED மானாமதுரையில் குப்பைகளை...