×

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

சாத்தூர், ஜன.30: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு  சாத்தூர் அருகே சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை சாத்தூர் எம்எல்ஏ எம்எஸ்ஆர்.ராஜவர்மன் துவக்கி வைத்தார். முகாமில் காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் மருத்துவம், பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், வெம்பக்கோட்டை யூனியன் சேர்மன் பஞ்சவர்ணம்கணேசன், கூட்டுறவு சங்க தலைவர் தங்கமுனியசாமி  மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Free General Medical Camp ,MGR Birthday ,
× RELATED எம்ஜிஆர் பிறந்தநாள் விழா ஏழை எளியோருக்கு அன்னதானம்