×

உசிலம்பட்டி அருகே பரபரப்பு இறங்கு முன் புறப்பட்டதால் தவறி விழுந்து மாணவி காயம் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல்

உசிலம்பட்டி, ஜன. 30: உசிலம்பட்டி அருகே, பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி காயமடைந்ததால், டிரைவரை கண்டித்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வையச்சாமி. இவரது மகள் துர்காதேவி (14). இவர், தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து, கோடாங்கிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து துர்காதேவி தனியார் பஸ்சில் ஏறி, எம்.பாறைப்பட்டிக்கு வந்தார்.

 எம்.பாறைப்பட்டி பஸ்நிறுத்தத்தில் மாணவி துர்காதேவி இறங்கியபோது, பஸ் புறப்பட்டுள்ளது. இதில், தவறி விழுந்த மாணவி காயமடைந்தார். தகவலறிந்த வையச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் டிரைவரை கண்டித்து பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் யூனியன் அலுவலகம் எதிரே தனியார் பஸ்சை மடக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வையச்சாமி மற்றும் உறவினர்களிடம் பஸ்  கண்டக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோல இனி நடக்காது. இனி கவனமாக டிரைவர் பஸ்சை ஓட்டுவார் என உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Student ,bus crashes ,road ,Usilampatti ,
× RELATED நாக்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடந்து வரும் போது மாணவர் உயிரிழப்பு