×

17பி உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் உசிலம்பட்டியில் பரபரப்பு

உசிலம்பட்டி, ஜன. 30: 17 பி உத்தரவை ரத்து செய்யக்கோரி உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநிலச்செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஞானசேகர், செயலாளர் ஒச்சுக்காளை, பொருளாளர் பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘சென்றாண்டு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெறும் கருத்துரு ஆகியைவ 17பி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கு 17பி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், உசிலம்பட்டி கல்வி மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை ரத்து செய்யாமல் உள்ளது. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் மட்டும் 54 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்து, உங்கள் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர் உறுதியளித்தார். ஆனால், இதை ஏற்காமல் ஆசிரியர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags : School Teachers Situated ,Usilampatti ,
× RELATED மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே...