×

ஊரக திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவி சாதனை

ஒட்டன்சத்திரம், ஜன. 30:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் ஊரக திறனாய்வு தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே இரண்டாம் இடம் பிடித்து இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரவ்லத்துல் ஜன்னா சாதனை படைத்துள்ளார். இத்தேர்வு ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வெற்றி பெறும் வரை ஆண்டுதோறும் ரூபாய் ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் இளங்கோவனையும் பள்ளியின் தலைமையாசிரியர் திருப்பதி மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்.

Tags : Government ,
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள...