×

பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றி துவக்கம்

அவிநாசி, ஜன.30: அவிநாசி வட்டார பகுதிகளில் குறைந்த மின் அழுத்தமின்றி மின்சாரம் சீராக வழங்குவதற்காக பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட் 110/33 கே.வி திறன் கொண்ட மின்மாற்றியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஜவஹர், அவிநாசி மின்கோட்ட செயற்பொறியாளர் விஜயஈசுவரன், உதவிசெயற்பொறியாளர் நாச்சிமுத்து, பெருமாநல்லூர் உதவிமின் பொறியாளர் அன்பழகன், ஒன்றிய துணைத்தலைவர் தேவிஸ்ரீ நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் வேல்குமார்சாமிநாதன், யூனியன் கவுன்சிலர்கள் ரத்னாம்பாள் சிவசாமி, ஐஸ்வர்யமகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தாமணி வேலுச்சாமி, ராதாமணி சிவசாமி, ரேஜிஸ், சுலோச்சனா வடிவேல், பெருமாநல்லூர் ஊராட்சித் துணைத்தலைவர் சி.டி.சி. வேலுச்சாமி மற்றும் மின் வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளர் விஜய ஈசுவரன் கூறுகையில்,  தமிழ்நாடு மின் வாரியத்தில் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்காக தமிழக அரசால் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக அவிநாசி மின் கோட்டம் பழங்கரை ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிய 33/11 கே.வி பழங்கரை துணை மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அந்த 33/11 கே.வி பழங்கரை துணை மின் நிலையம் மின் சப்ளைக்கு ஆதாரமாக, திருப்பூர் மின் பகிர்மான வட்டம் பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள 110/33-11 கே.வி. பெருமாநல்லூர்  துணை மின் நிலையத்தில் புதியதாக 110/33 கே.வி மின்மாற்றி 4.25 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

Tags : Opening ,Transformer ,Perumanallur Sub Power Station ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு