×

மசினகுடி அருகே ஆண் சிறுத்தை பலி

ஊட்டி, ஜன. 30:  நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலத்திற்குட்பட்ட மசினகுடி  வனச்சரகம், அவரல்லா வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர்  நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரல்லா வனத்தில்  சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து உயரதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்தனர்.  இத்தகவலின் பேரில் வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த்,  மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ  இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதில் இறந்தது 4 வயது மதிக்கத்தக்க ஆண்  சிறுத்தை என்பது தெரியவந்தது. ஒரு வாரத்திற்கு முன் இறந்திருக்கலாம் என்பதால், உடல்  முழுமையாக அழுகிப்போய் இருந்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியிலேயே பிரேத  பரிசோதனை செய்யப்பட்டு சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது.

Tags : Masinagudi ,
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!