×

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: தா.மோ.அன்பரசன் அறிவிப்பு


காஞ்சிபுரம், ஜன.29: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளதாக, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் மறைமலைநகர் பொத்தேரி எஸ்ஆர்எம் ஓட்டல் கூட்ட அரங்கில் எனது (தா.மோ.அன்பரசன்) தலைமையிலும், அனைத்துக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்ஆர்சி, என்பிஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் அதே அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட துணைச்செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலையிலும் வடக்கு மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Party Meeting ,Kanchi North District ,DMK ,
× RELATED கொரோனாவை எதிர்கொள்ள கட்சி...