×

மன்னார்குடியில் வாடகை உயர்வு கண்டித்து கடையடைப்பு நகராட்சி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜன. 29: வணிக நிறுவனங்களுக்கு பன் மடங்கு வாடகை உயர்வு, திடக்கழிவு மேலா ண்மைக்கு கூடுதல் கட்டணம் வசூல் போன்றவற்றை கண்டித்து மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கான வாடகை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 2 வருடங்கள் முன் தேதியிட்டு பன்மடங்கு உயர்த்தப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய வணிகர் விரோத நடவடிக்கைகளை கண்டி த்தும், 5 ஆண்டுகளாக ஆணையர் இல்லாத நிலையை மாற்றி உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும், வணிக நிறுவனங்கள் நிறைந்த கடைவீதி பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முழு கடையடைப்பு மற்றும் பேரணி நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

போராட்டத்திற்கு, உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கம், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர் கள் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், தையல் தொழிலா ளர் சங்கம், பூக்கடை வியாபாரிகள் சங்கம், வெற்றிலை வியாபாரிகள் சங்கம், நகர முடிதிருத்தும் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரி வித்திருந்தன.அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி நகரத்தில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இத னால் பஸ் நிலையம், பெரியகடை வீதி, நகை கடைகள் நிறைந்த கம்மாள தெரு, காந்தி ரோடு, தேரடி, பந்தலடி பகுதகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத் தொடர்ந்து மன்னார்குடி பெரியார் சிலை அருகில் இருந்து வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா தலைமையில் பேரணி புறப்பட்டது. பேரணியை வணிகர் நலச்சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் பைங்கா நாடு ஞானசேகரன் துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி யபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று மன்னார்குடி நகராட்சி அலுவலகத் தை முற்றுகையிட்டனர்.

அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் எஸ்எம்டி கருணாநிதி தலைமை வகித்தார். கோரிக் கைகளை வலியுறுத்தி வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஆர்வி ஆனந்த், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராமச்சந்திரன், நகராட்சி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் கைலை ஊமைத்துரை உள்ளிட்ட ஏராளமான சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர். முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார். பின்னர், போராட்டக்குழு சார்பில் அதன் நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்திற் குள் சென்று நகராட்சி ஆணையர் (பொ ) திருமலை வாசனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். வணிகர்களின் பேரணி, கடையடைப்பு போராட்டங் களை முன்னிட்டு டிஎஸ்பி (பொ ) சங்கர், பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த பட்டனர்.

Tags : Businessmen protests ,office ,Mannargudi ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...