×

பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர், ஜன. 29: பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில், எம்ஜிஆர் 103வது பிறந்த நாள் விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. பட்டறைபெரும்புதூரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் இ.கந்தசாமி தலைமை வகித்தார். வி.என்.சம்பத், ஊராட்சி மன்ற தலைவர் மேனகாமுத்து, எம்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள்,  ராமச்சந்திரன், சுகுமாரன், எம்.சீனிவாசன், ஆர்.கிருஷ்ணன், ஜனார்த்தனன், பி.ஆறுமுகம், ரவி ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன்.எம்.எல்.ஏ., அம்மா பேரவை இணை செயலாளர்கள் சி.பி.மூவேந்தன், செவ்வை எம்.சம்பத்குமார், பேச்சாளர் சிட்கோ சீனு, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், எஸ்.ஏ.நேசன், பாண்டூர் மோகன்ராவ், பூண்டி விஜி, கங்காதரன், சாமுவேல், கவி, என்.எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கூட்டுறவு சங்க தலைவர் சி.சின்னதுரை நன்றி கூறினார்.

Tags : MGR ,birthday party ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...