×

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் குறித்த பயிற்சி

புதுக்கோட்டை, ஜன.29: வேளாண்மை அறிவியல் நிலையத்தின்கீழ் நிக்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கால்நடை வளர்ப்புக்கு உகந்த சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் குறித்து பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது உழவியல்துறை பேராசிரியர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில் ஆசியாவில் உள்ள நேப்பியர் புல்களிலேயே அதிகமான புரச்சத்து 16 சதம் முதல் 18 சதம் வரை மற்றும் அதிகமகசூல் கிடைக்கும் 200 டன் பசும் தீவனம் இனமாகும்.நம்மிடம் தற்போது உள்ள கோ-4 ,கோ-5 ,வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது அதன் மகசூல் புரதசத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும்.இத்தீவனபுல்லின் புரதசத்து 14-18 சதம் ஆகும்.இது ஆசியாவில் இருக்கும் அனைத்துவகையான நேப்பியர் புற்களைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைத்தால் சுமார் 15 கறவைமாடுகளின் தீவனதேவையை இப்புல் பூர்த்தி செய்ய வல்லது.சூப்பர் நேப்பியர் புல்லை விதைக்கரணைகள் மூலம் நடவு செய்யலாம்.ஒருஏக்கருக்கு 10 ஆயிரம் விதைக்கரணை தேவைப்படும்.ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைக்கிறது.தொடர்ந்து அடுத்த 40 நாட்களில்ஒருமுறை அறுவடை செய்யலாம்.

ஆண்டிற்கு 9 அறுவடைகள் வரை செய்யலாம்.இரண்டாவது அறுவடை முடிந்தவுடன் அதனை வளரவிட்டு 90 நாட்கள் கழித்து விதைக்கரணைக்கு பயன்படுத்தலாம். கலப்பு பயிராக 3 வரிசைகள் சூப்பர் நேப்பியர் ஒட்டுபுல்லும் ஒருவரிசை வேலி மசாலும் கலந்து பயிர் செய்தால் ஊட்டச்சத்தினை அதிகப்படுத்தலாம். ஊட்டச்சத்து கொடுக்கும் முறை ஒரு ஏக்கருக்கு 10 டன் அளவிற்கு தொழு உரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 130 கிலோ யூரியா,125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 27 கிலோ பொட்டாசு இட வேண்டும்.முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினை 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச்சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும். என்றார்.

Tags :
× RELATED கடைசி கட்ட பயிற்சி!