×

அத்தாணி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டம்

அறந்தாங்கி, ஜன.29: அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஏகனிவயல் தூய மரியன்னை ஆர் சி உயர்நிலைப்பள்ளி இடையேயான பரிமாற்றுத் திட்டம் நடந்தது. இன்றைய அரசினுடைய பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் 20 மாணவர்களை கொண்ட குழுவும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தார்கள். கூடுதலாக சிறப்பு விருந்தினராக வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் வருகை புரிந்து என்று இறைவழிபாட்டு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக இறைவழிபாட்டு கூட்டம் நிறைவுற்று.

அதைத் தொடர்ந்து மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள், அதற்கு பிறகு 12 மணிக்கு மேல் மாணவர்கள் களப்பயணம் ஆக இந்த பகுதியை கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் கடற்கரை தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை மாணவர்களுக்கு காட்டும் விதமாக மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை காண்பித்து மீண்டும் துறையில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் , அதை கண்டுபிடித்து அதன் பிறகு ராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியை பார்க்க வேண்டும் அங்கு உள்ள கணினி ஆய்வகம், நூலக வசதி எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் ஆய்வகம் மெக்கானிக்கல் ஆய்வகம் கொண்டே மாணவர்களுக்கு காண்பித்து உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு அங்கு உள்ளவர்கள் முதல்வர் அவர்களை சந்தித்து அனுமதி கேட்டு மாணவர்கள் மிகச்சிறப்பாக கண்டுகளித்தனர். பள்ளி பரிமாற்று திட்டத்தின் மூலம் மாணவர்கள் நிறைய அனுபவங்களை பெற்றுக் கொண்டனர்.

Tags : Athani Union Middle School ,
× RELATED பள்ளி பரிமாற்றம் திட்டத்தில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி