×

செங்குணத்தில் காணாமல் போன நெக்லஸை பெண்ணிடம் ஒப்படைத்த அய்யப்ப பக்தருக்கு எஸ்பி பாராட்டு

பெரம்பலூர்,ஜன.29: தினகரன் நாளிதழ் செய்தி எதி ரொலியாக செங்குணத்தில் காணாமல்போன நெக்ல ஸை நேர்மையாக பெண் ணிடம் ஒப்படைத்த ஐயப்ப பக்தருக்கு பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த் திபன் பாராட்டு தெரிவித்தார். பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் நடுத்தெரு வில் வசித்து வருபவர் ராஜ துரை மனைவி உத்தமிழ் செல்வி(46). இவர் அதே பகுதியில் உள்ள பூசாரி ஒருவரிடம் மந்தரித்த திரு நீர் பிடிப்பதற்காக சமீபத் தில் இரவுநேரத்தில் சென் றுள்ளார். பூசாரியிடம் சென் றுவரும் போது தனது பேத் தியை கைகளில் தாங்கிய படி தூக்கிக் கொண்டுவந் துள்ளார்.அப்போது அந்த குழந்தையின் கைகள் இவரின் கழுத்தில்பட்டு இழுக்கப்பட்டதில் கழுத்தில் அணி ந்திருந்த நெக்லஸ் தவறுதலாக கீழேவிழுந்து விட்டது. இவர் வீட்டிற்கு வந்து பார்த்தப் பிறகுதான் தனது கழுத் தில் அணிந்திருந்த நெக் லஸ் காணாமல் போனது பற்றி தெரியவந்தது.

இதனையறிந்து உத்தமிழ் செல்வி கதறி அழுதுள்ளார். இரவுமுழுவதும் தான் நட ந்து சென்றுவந்த பாதை யில் நடையாய் நடந்து தேடி ப் பார்த்தும் நெக்லஸ் கி டைக்கவில்லை. இதனிடை யே நெக்லஸ் காணாமல் போனதுபற்றி விடிந்தவு டன் ஊர்முழுவதும் தண் டோரா மூலம் கிராம பொது மக்களுக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.அப்போதுஅதே ஊரில் மாலை அணிந்திரு ந்த ஓம்  ஐயப்ப சேவா சங்க பக்தர் ராஜேந்திரன் மகன் ராஜாராம்(25) என்ப வர் அன்றிரவு தற்செயலாக பொன்னரும்பு பெட்டிக்க டை அருகில் நடந்துசென்ற போது கீழே மின்னிய தங்க நெக்லஸை கண்டுபிடித்து யாருடையது என்பது தெரி யாததால் போலீசிடம் ஒப்ப டைக்கலாம்என முடிவுசெய் து பத்திரமாக வைத்திருந் தார். பிறகு தண்டோரா தக வலின்படி ராஜாராம் உள் ளிட்ட மாலை அணிந்திரு ந்த ஐயப்ப பக்தர்கள் அ னைவரும் ஒன்றுசேர்ந்து நகையை கீழேதவறவிட்ட உத்தமிழ்செல்வியிடம் சென்று அவர் நகை தான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு நகையை ஒப்படைத் தனர்.

இந்த நகை ரூ 75 ஆயிரம் மதிப்புடையது. இந்த நேர் மையான செயலைக் கண் டும் கேள்விப்பட்டும் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் ராஜாராமை பாராட்டிய செய்தி மறுநா ளே தினகரன் நாளிதழில் வெளியாகி இருந்தன. இந்த செய்தியின் எதிரொலி யாக மருவத்தூர் போலீசார் மாவட்ட காவல்துறைக்கும் இதுபற்றித் தகவல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பெர ம்பலூர் மாவட்ட எஸ்பி அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பி நிஷா பார்த்திபன், ராஜாராமை நேரில்அழைத்துப் பா ராட்டி, பாராட்டுச்சான்றும் பரிசுத் தொகையும் வழங் கியுள்ளார். இந்த செயலுக் காத மருவத்தூர் காவல் துறைக்கும் செய்திவெளி யிட்ட தினகரன் நாளிதழுக் கும் செங்குணம் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ள னர்.

Tags : SP ,devotee ,Ayyappa ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...