×

பொதுப்பாதையை பயன்படுத்த விடாமல் சிலர் தகராறு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்த வாலிகண்டபுரம் பெண்

பெரம்பலூர்,ஜன.29: பெரம்பலூர் கலெக்டர் அலுவல கம் முன்பு தீக்குளிக்க வந்த வாலிகண்டபுரம் பெண்ணால் 2வது நாளாக பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 27ம்தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது,வேப்பந்தட்டை தாலுக்கா ரஞ்சன்குடி கிரா மத்தைச் சேர்ந்த அருள் செல்வம்(28) என்ற ஆட்டோ டிரைவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு டவு ன்பஸ் மோதி தனது காலி ல் படுகாயம் ஏற்பட்டதற்கு, உரிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரவழியின்றி, நீதி மன்ற வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், மனமுடைந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கு ம்நாள் கூட்ட அரங்கினுள் மனைவியுடன்வந்து தலை யில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முற்பட்ட சம்ப வம் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு அடங்கும் முன் பாக இரண்டாவது நாளான நேற்று வாலிகண்டபுரம் கிராமத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது கோரிக்கை ப் புகார்மனுவுக்கு நீண்டநா ளாகத் தீர்வு கிடைக்காத தால் மண்ணெண்ணை யைத் தலையில் ஊற்றித் தீக்குளிக்க திட்டமிட்டுவந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம்,வேப் பந்தட்டை தாலுக்கா, வாலி கண்டபுரம்கிராமம், மாரிய ம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான் ம னைவி நவாப்பீ (38) என்ப வர் தனது தாயுடன் நேற்று பெரம்பலூர் மாவட்டக் க லெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழை யும் முன்பாக அவரை சோத னையிட்ட போலீசார் தற் கொலை முயற்சிக்காக அவர் மண்ணெண்ணெய் பாட்டிலை மறைத்து வைத் துக் கொண்டு வந்தது தெரி யவந்தது. பின்னர் இது பற் றி அங்கு வந்த வேப்பந்தட் டை தாசில்தார் கவிதாவி டம் நவாப்பீ அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்ப தாவது :

நான் வாலிகண்டபுரத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவருகிறேன். எனது வீட்டின் தென்புறமும், கீழ்புறமும் பொதுப்பாதை உள்ளது. இந்தப் பாதையை பயன்படுத்த விடாமல் கருப்பையா மனைவி சின்னப்பொண்ணு உள்ளிட்ட சிலர் தடுத்து தகராறு செய்து வருகின் றனர். இதுதொடர்பாக கட ந்த நவம்பர் மாதம் 25ம் தேதி மற்றும் டிசம்பர் மாதம் 2ம்தேதி ஆகியத் தேதிகளில் பெரம்பலூர் கலெக் டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆள்பலம்,பணபலம் வைத்து மிரட்டும் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களது பாதை உரிமையை மீட்டுத்தர கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந் து வேப்பந்தட்டை தாசில் தார் கவிதா மனு குறித்து விசாரணை நடத்த உத்தர விடுகிறேன் எனக் கூறிய தைத் தொடர்ந்து நவாபி அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிச் சென்றார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடு த்த நாட்கள் என இரண்டாவது நாளாக மனுதாரர்கள் தீக்குளிக்க முற்பட்ட சம்ப வம் மாவட்டஅளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Tags : office ,Perambalur Collector ,road ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...