×

பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை, ஜன.29: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 -20 ம் ஆண்டு ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், கோடை நெல் மற்றும் பருத்தி பயிரை காப்பீடு செய்ய ஒவ்வொரு பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யலாம்.

நெல் தரிசில் உளுந்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.236.25, நெல் தரிசில் பாசிப் பயிறு ஏக்கருக்கு ரூ.236.25. இந்த இரண்டு பயிர்களுக்கும் வரும் 15ம் தேதி கடைசி நாள். நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.375 கடைசி தேதி வரும் 15ம் நாள். எள் ஏக்கருக்கு ரூ. 189 கடைசி வரும் 16ம் தேதி. கோடை நெல் ஏக்கருக்கு ரூ.465 மார்ச் மாதம் 31ம் கடைசி தேதி. நெல் தரிசில் பருத்தி ஏக்கருக்கு ரூ.1240. மார்ச் மாதம் 31ம் தேதி கடைசி. கரும்பு ஏக்கருக்கு ரூ.2600 கடைசி தேதி அக்டோபர் 31ம் தேதி. கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னதாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்