×

கட்டுரைப் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

கமுதி, ஜன.29:  கமுதி அருகே ராமசாமிபட்டி பள்ளி மாணவி கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 60 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கட்டுரை போட்டியில் கமுதி அருகே ராமசாமி பட்டி அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி அழகேஸ்வரி முதலிடம் பிடித்தார். அவருக்குகலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  பள்ளியின் தலைமையாசிரியர் கீதாராணி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி சேதுபதி, ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் ஆகியோர் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டினர்.

Tags : Government school student ,
× RELATED பெரணமல்லூர் அருகே கண்களை துணியால்...