×

கலப்பட பெட்ரோல் விற்பதாக கூறி ‘பங்கை’ வாகன ஓட்டிகள் முற்றுகை மேலூரில் பரபரப்பு

மேலூர், ஜன. 29: மேலூரில் நகராட்சி அலுவலகம் எதிரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று மாலை இங்கு பெட்ரோல் போட்டுச் சென்ற வாகனங்கள் சிறிது தூரம் சென்றதும் நின்றதாக கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் மெக்கானிக்கிடம் தங்கள் வாகனங்களை சோதனை செய்தபோது, கலப்பட பெட்ரோலால் வாகனம் நின்றது தெரிய வந்தது. உடனே பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள், கேன்களில் பெட்ரோலை வாங்கி பார்த்தனர். பாட்டிலின் மேல் பகுதியில் பெட்ரோல் போலவும், கீழ் பகுதியில் தண்ணீர் போலவும் இருந்துள்ளது. இதனால் பங்க் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.இதையடுத்து பெட்ரோல் விற்பனையை நிறுத்திய ஊழியர்கள், இது குறித்து மதுரை கப்பலூரில் உள்ள பெட்ரோலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பெட்ரோல் மாதிரியை சேகரித்து சென்றனர். இந்த பங்கில் பெட்ரோல் போட்டு சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென நின்றதால் மேலூர் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Motorists ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி