×

மணவாளக்குறிச்சியில் அம்மா திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழா

குளச்சல், ஜன.29: நாடாளு மன்ற மேலவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹.99.50 லட்சம் மதிப்பீட்டில் மணவாளக்குறிச்சி பரப்பற்றில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பரப்பற்றில் நடந்தது. விஜயகுமார் எம்.பி.தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். ஒன்றிய முன்னாள் செயலாளர்கள் ராஜரத்னம், சந்தையடி பாலகிருஷ்ணன், மாவட்ட  எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கனகராஜன், ஒன்றிய செயலாளர்  மனோகரன், மாவட்ட குற்றவியல்  வழக்குரைஞர் ஞானசேகர், மண்டைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், கல்லுக்கூட்டம் பேரூர் செயலாளர் அம்மா ஆன்றனி,பரப்பற்று ஊர் தலைவர் ராமநாதன், செயலாளர் செல்ல நாடார் உள்பட ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mother Marriage Hall Foundation Ceremony ,Manavalakurichi ,
× RELATED மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்