×

சேலம் கந்தம்பட்டி எஸ்ஆர்கே பள்ளி ஆண்டுவிழா

சேலம், ஜன.29: சேலம் எஸ்ஆர்கே பள்ளி ஆண்டு விழாவில், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சேலம் கந்தம்பட்டி எஸ்ஆர்கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் சேர்மன் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல், அருட்தந்தை அருளப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

துணைவேந்தர் குழந்தைவேல் பேசுகையில், ‘‘இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை மூன்று முறை இந்தியர்கள் பெற்றுள்ளனர். அதுபோன்ற நோபல் பரிசுக்கான அறிஞர்களை உருவாக்கும் கல்வி நிலையமாக இப்பள்ளி திகழ வேண்டும். மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, விருப்பத்திற்கேற்ற கல்வியை அளிப்பது பெற்றோர்களின் கடமை,’’ என்றார். விழாவில் சென்ற கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் துணை வேந்தர் குழந்தைவேல் வழங்கி, பாராட்டினார். மேலும், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Salem Kandhampatti SRK School Anniversary ,
× RELATED சந்து கடையில் மது விற்ற 5பேர் கைது