×

துத்திக்குளத்தில் இலவச மூட்டு மருத்துவ முகாம்


சேந்தமங்கலம், ஜன.29: சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் மசூதியில், பேளுக்குறிச்சி அரசு மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை இணைந்து இலவச மூட்டு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் எலும்பு மூட்டு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோரை டாக்டர் மணி தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்து ஆலாசனை வழங்கினர். தொடர்ந்து தமுமுகவை சேர்ந்த 37 பேர் ரத்த தானம் செய்தனர். இதில் சேந்தமங்கலம் ஒன்றிய குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தமுமுக மாவட்ட தலைவர் சுல்தான் பாஷா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஜாகீர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arthritis Camp ,
× RELATED சேந்தமங்கலத்தில் இலவச எலும்பு மூட்டு மருத்துவ முகாம்