×

கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், ஜன.29: நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது.இது குறித்து மாவட்டபொறுப்பாளர் காந்தி செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் வருகிற 3ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டுக்கு செல்வது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : Eastern District ,DMK ,Executive Committee Meeting ,
× RELATED சொல்லிட்டாங்க...