×

வேப்பனஹள்ளி அருகே 3 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை

வேப்பனஹள்ளி, ஜன.29: வேப்பனஹள்ளி அருகே 3 கோயில்களின் உண்டியல்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பனஹள்ளி அருகே திம்மசந்திரம் கூட்ரோடில் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோயில்  கட்டப்பட்டு கடந்து 2 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, கோயிலை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளைடித்து சென்றனர். தொடர்ந்து, பெரிய மணவாரனப்பள்ளி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரசாமி கோயில் மற்றும் மாரியம்மன் கோயில்களின் பூட்டை அடுத்தடுத்து உடைத்து உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை சம்பவங்கள் குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : temples ,Veppanahalli ,
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆயிரம் கோயில்களில் திருப்பணி