காவேரிப்பட்டணத்தில் மாவட்ட குழு தலைவர் நன்றி தெரிவிப்பு

காவேரிப்பட்டணம், ஜன.29: காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகளில் திமுக மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜன், ஒன்றியசெயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்யாசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், அம்மு, பழனி, நித்யா, சக்தி, பார்வதி, சரவணன் மற்றும் திருமால், மணிவாசகம், சாஜித், சின்னப்பையன், ஊராட்சிமன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: