×

ஓசூரில் நாளை திமுக செயற்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜன.29: ஓசூரில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கைள்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 30ம் தேதி காலை 10 மணியளவில் ஓசூரில் உள்ள மோனிகா மஹாலில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நடைபெற உள்ள மாநகர, நகர, பேரூர் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், வரும் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்தும், பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே, கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுகுழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK Working Committee Meeting ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு