×

மொரப்பூர் கொங்கு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழா

அரூர், ஜன.29: மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31வது சாலை பாதுகாப்பு விழா கடைப்பிடிக்கபட்டது. மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31வது சாலை பாதுகாப்பு விழா கடைப்பிடிக்கபட்டது. கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் காந்தி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் குணசேகரன் வரவேற்றார். மொரப்பூர் கொங்கு கல்லூரியின் தாளாளர் தீர்த்தகிரி, அறக்கட்டளையின் பொருளாளர் சாமிகண்ணு, மொரப்பூர் கொங்கு கல்வி அறக்கட்டளையின் இயக்குநர்கள் ராமு, பிரபாகரன், வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மொரப்பூர் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் மொரப்பூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு, சாலை விதிகளை பயன்படுத்துவதின் அவசியத்தையும் நன்மைகளையும் கூறினர். காவன் செயலி, தலைக்கவசம், போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் பெறுவதின் அவசியம் பற்றியும் மாணவ,  மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Road Safety Festival ,Kongu College ,Morapur ,
× RELATED மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்