×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தர்மபுரி, ஜன.29: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பறையபட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள வாணியாறு கால்வாய் பாசனப் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீர் வளத்திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் கோயமுத்தூரில் உள்ள நீர் நுட்ப மையம் செயல்படுத்தபட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி, பறையப்பட்டி கிராமத்தில் நடந்தது.

பயிற்சியை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம் தலைமை வகித்து, இத்திட்டத்தை பற்றியும் மற்றும் கரும்பில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.  இத்திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி அய்யாதுரை, கரும்பு சாகுபடியில் உழவியில் முறைகளான உழவுமுறை, நடவுமுறை, களை மேலாண்மை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி, தோகை உரித்தல், விட்டம் கட்டுதல், மண் அணைத்தல் மற்றும் வளர்ச்சி ஊக்கி தெளித்தல் பற்றி விளக்கமளித்தார்.  காலநிலை விஞ்ஞானி பாலமுரளி பேசும் போது, கரும்பு பயிருக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை மற்றும் கால நிலைகளினால் பயிருக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி விளக்கினார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Pappretipatti ,
× RELATED தருமபுரி மாவட்டத்தில் அரூர்,...