×

முத்தானூர் பகுதியில் சாக்கடையை தூர்வார வலியுறுத்தல்

கடத்தூர், ஜன.29:  கடத்தூர் அருகே முத்தானூர் பகுதியில் சாக்கடையில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடத்தூர் அருகே ஒப்பிளிநாயனள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் ேசகரமாகும் கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாக்கடையை தூர் வாராததால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிகரித்து இரவு ேநரங்களில் தூங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாக்கடையை தூர்வார அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muttur ,
× RELATED முத்தூர் நீரொழுங்கியில் ரூ.111.33 கோடியில் சீரமைப்பு பணி நிறைவு