×

கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் அளவுமானி பொருத்த வேண்டும்

உடுமலை, ஜன.29: குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமையில்  ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்தியபாமா மற்றும் ஒன்றிய ஆணையாளர் ரொனால்டு ஷெல்டன் பெர்னாண்டோ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த ராஜமாணிக்கம் திருமூர்த்தி பேசும்போது, பல கிராமங்களில் கொசுக்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் முழுமையாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று கேள்வியெழுப்பினார். தி.மு.க.வை சேர்ந்த திவ்யா பேசும்போது, கொங்கல்நகரம் அரசுப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கவேண்டும். தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர் நியமனம் செய்வது, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 2017-18  மற்றும் 2018-19 ஆண்டுகளில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டு இதுவரை தொடங்கப்படாத பணிகளை ரத்து செய்வது, கிராம ஊராட்சிகளில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை தினசரி அளவீடு செய்யும் வகையில் கூட்டுக்குடிநீர்த்திட்டக்குழாய்களில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அளவுமானி பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், ஒன்றியகுழு துணைத் தலைவர் புஷ்பராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், செல்வராஜ், கல்யாணி, விஜயலட்சுமி, மோகனப்ரியங்கா, முருகானந்தம் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு