×

வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஜன. 29: வங்கி ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும். குடும்ப நல ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண்டும். ஓய்வூதியத்தை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். முறைப்படுத்தப்பட்ட பணி நேரம் வேண்டும். சம்பள பேச்சுவார்த்தையில் கால தாமதம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags : Bank employees union demonstration ,
× RELATED சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்