உறைப்பனியில் பாதிக்காத வகையில் மரவியல் பூங்காவில் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி, ஜன. 29: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு இருந்து வருகிறது. தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம், தலைக்குந்தா, சூட்டிங்மட்டம், கோரக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டி வருகிறது. உறைபனி காரணமாக தேயிலை செடிகள், வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள், புற்கள் காய்ந்து கருகி பசுமை இழந்து வருகின்றன.இதனிடையே ஊட்டியில் உள்ள பூங்காக்களில் உள்ள மலர் செடிகள், அலங்கார செடிகள் பனியால் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி தாகை செடி கொண்டு பாதுகாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள அலங்கார செடிகளை தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் மரவியல் பூங்காவில் இம்மாத துவக்கத்தில் மலர் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளன. இவையும் பணியில் பாதிக்காமல் இருக்கும் வகையில் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Related Stories:

>