×

பூண்டி அருகே முள்ளங்காடு வன பகுதியில் மான்வேட்டை?

கோவை, ஜன.29:  கோவை, பூண்டி அருகே போலுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்ட முள்ளங்காடு பகுதியில் மான், காட்டு மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த வேலு என்பவர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது ஒரு மரத்தின் அடியில் மான் தோல் இருப்பதை பார்த்தார். இதுகுறித்து தனியார் என்.ஜி.ஓவை சேர்ந்த நவீன் என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, நவீன் அவரது நண்பரான வேட்டை  தடுப்பு காவலர் மகேஷிடம் மான் தோல் இருப்பதை தெரிவித்து அதை மறைத்து வைக்க கூறினார்.

இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவவே  வனத்துறை அதிகாரிகள் முள்ளங்காடு வன பகுதிக்குள் வந்தனர். தோல் இருந்த இடத்திற்கு வருவதற்குள் வேலு, நவீன், மகேஷ் ஆகியோர் தோலை மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முள்ளங்காடு வனப்பகுதியில் மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் தனியார் பொதுநல அமைப்பினர் வனத்துறை ஊழியர்களின் தொடர்போடு மான் வேட்டையாடி வருகின்றனர். அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும், காணாமல் உள்ளனர். தற்போதும், மான் வேட்டையாடி உள்ளனர். அந்த தோலை மறந்து விட்டு சென்றிருக்கலாம், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,`மான் தோல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இச்சம்பவத்தில் தொடர்புடைய வேலு என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Tags : forest area ,Mullungadu ,Bundi ,
× RELATED புழல் ஏரி உபரிநீர் கால்வாயில்...