×

பிரசித்தி பெற்ற இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழா பிப். 2ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

ராதாபுரம், ஜன.28: இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழா பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்.11ம் தேதி தங்க தேர் பவனி நடக்கிறது. இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயம் தென்தமிழக கடற்கரை கிராமங்களில் பிரசக்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாகும். லூர்து நகரில் மாதா காட்சியளித்த மலையில் பாதம் பதிந்த புனித கல்லின் ஒரு பகுதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது. 1ம் திருவிழாவன்று புனித அந்தோணியார் மண்டல இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் அடிகள் தலைமையேற்று கொடியேற்றி விழாவை துவக்கி வைக்கிறார். அலங்காரதட்டு பங்குத்தந்தை ஜாண் செல்வம் மறையுரை நிகழ்த்துகிறார்.இரண்டாம் திருவிழாவில் புனித சின்னப்பர் மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். திருச்செந்தூர் ஜீவா நகர் பங்குத்தந்தை சகேஷ் சந்தியா திருப்பலி நிறைவேற்றுகிறார். 3ம் திருவிழா புனித இராயப்பர் மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர்.
குருஸ்புரம் பங்குத்தந்தை உபர்ட்ஸ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 4ம் திருவிழாவில் புனித மரியன்னை மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். மணப்பாடு புனித யாகப்பர் திருத்தல அதிபர் லெரின் டி ரோஸ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றபடுகிறது.

5ம் திருவிழாவில் புனித சுவக்கீன் மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் பொருளாளரும் கீழ வைப்பாறு பங்குத் தந்தையுமான அந்தோணி ஜெகதீசன் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 6ம் திருவிழாவில் புனித அன்னம்மாள் மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. ரோச் மேல்நிலைப்பள்ளியின் கலைநிகழ்வுகள் நடைபெறுகிறது.
7ம் திருவிழாவில் புனித சவேரியார் மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். தூத்துக்குடி நற்செய்தி நடுவ இயக்குநர் ஸ்டார்வின் தலைமையில்  திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மறை மாவட்ட இளையோர் கலைநிகழ்வுகள் நடைபெறுகிறது. 8ம் திருவிழாவில் உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாகர்கோவில், கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

9ம் திருவிழாவில் புனித ஆரோக்கிய அன்னை மண்டலத்தார் சிறப்பிக்கின்றனர். காலையில் திருயாத்திரை திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் திருவிழா மாலை ஆராதனையை  கூத்தன்குழி, கோட்டார் மறை மாவட்ட ஆயர் சூசை நசரேன் தலைமையேற்று நடத்துகிறார். 10ம் திருவிழாவான பிப்.11ம் தேதி காலை 6.30 மணியளவில் திருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் நடைபெறுகிறது. இடிந்தகரை பங்குத்தந்தை ஜேசுதாஸ் மறையுரை நிகழ்த்துகிறார். அன்று மாலை 3 மணிக்கு அன்னையின் தங்க தேர் தேர்ப்பவனி  நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதீப் , உதவிப் பங்குத்தந்தை ஜோ மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Pure Lourdes Mother Temple Festival Start ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி