×

கொல்லாங்குளம் தங்கம்மன்,முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நெல்லை, ஜன. 28: கொல்லாங்குளம் தங்கம்மன்,முத்தாரம்மன், காந்தாரியம்மன்  கோயிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.  கொல்லாங்குளம் தங்கம்மன்,முத்தாரம்மன், காந்தாரியம்மன்  கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த (26ம்தேதி)  காலை 5.15 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, எஜமானிய வர்ணம், மகாலெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம்,  துர்க்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆயுஸ்யஹோமம், கோபூஜை, பூர்ணாகுதி  தீபாராதனை நடந்தது. மாலை 4மணிக்கு தீர்த்தங்கள் அழைத்து வருதல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, திக்குபூஜை, ஈசான்ய பைரவர் பூஜை நடந்தது. இரவு 7மணிக்குமேல் பாலாலய கலாகர்ஷனம், ஜனஹோமம், திருக்குடங்கள் யாகசாலை பிரவேசம்,  முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை  நடந்தது. இரவு 9மணிக்கு யந்திரஸ்தாபனம் நடந்தது. விழாவில் பார்த்திபன் ஸ்தபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் நேற்று  (27ம்தேதி) காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணாகுதி சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமானம்,  மூலஸ்தான அம்பாள்களுக்கு  மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை   கொல்லாங்குளம் தேவர் சமுதாய விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.

Tags : Kumbakishekham Temple ,Muttaramman Temple ,
× RELATED அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம்