×

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி,ஜன.28: தூத்துக்குடி சிவ அரசு மேல் நிலைபள்ளியில் குடியரசுதின விழா நடந்தது. ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவர் அருள்ராஜ் பிஞ்ஞாரோ, செயலாளர் பாலாஜி, பொருளாளர் அருள்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியை செந்தூர்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் அமிர்தலிங்கம் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் பள்ளி மாணவர்களும், ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  கோரம்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட அ.சுப்பிரமணியபுரம் தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கோரம்பள்ளம் ஊராட்சி தலைவர் செல்வபிரபா தலைமை வகித்து தேசிய கொடியேற்றி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை மெர்லின் அற்புதவல்லி வரவேற்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நாட்டுப்பற்று தொடர்பான பாடல்கள் மற்றும் நாடகங்கள் என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கோரம்பள்ளம் ஊராட்சி துணைத்தலைவர் பொன்மாரிசெல்வராஜ், அதிசயராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியை செல்வராணி தங்கத்தாய் நன்றி கூறினார்.

 மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் குடியரசு தின விழா நடந்தது. தமிழ்த்துறை பேராசிரியர் ரமணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயசிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மூன்றாமாண்டு கணிதத்துறை மாணவி மஞ்சுமாரி குடியரசு தின விழா குறித்து உரையாற்றினார். வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயபத்மதீபா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்யதலிபாத்திமா, ரமணி ஆகியோர் செய்திருந்தனர். தூத்துக்குடி கமாக் பள்ளியில்  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவில் நிர்வாக உறுப்பினர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராள மானோர் பங்கேற்றனர். குடியரசு தினத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  உடன்குடி: குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பஞ். தலைவர் சொர்ணபிரியா தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் துணைத்தலைவர் கணேசன், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் பழனீஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Republic Day ,Thoothukudi District ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!