×

திருவாரூர் -கடலூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

கடலூர், ஜன. 28: கடலூரிலிருந்து சிதம்பரம் வழியாக திருவாரூர் வரை மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக திருவாரூரிலிருந்து சிதம்பரம் வழியாக கடலூருக்கு மின்சார ரயில் இன்ஜின் மட்டும் சோதனைக்காக ஓட்டி செல்லப்பட்டது. விழுப்புரம்- திருவாரூர் இடையே ரயில் பாதை மின் பாதையாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பாதை மாற்றி அமைக்கப்படும் நிலையில் மின்சார ரயில் கடலூர் மார்க்கமாக விழுப்புரம் - திருவாரூர் இடையே இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் பயணிகளுக்காக பயன்பாட்டில் வரவுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக விழுப்புரம் -கடலூர் இடையே மின்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதில் கடலூர்- விழுப்புரம் ரயில்வே மின் பாதை திட்டம் முழுமை பெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக கடலூரில் இருந்து திருவாரூருக்கு ரயில்வே பாதை மின் பாதையாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கட்ட பணியும் நிறைவடைந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி திருவாரூரிலிருந்து சிதம்பரம் வழியாக கடலூர் முதுநகர் வரை ரயில்வே இன்ஜின் மின் பாதையில் இயக்கப்பட்டது. ரயில்வேதுறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் புதிதாக துவங்கப்பட உள்ள மின்சார ரயில் பாதையில் சோதனை ஓட்டத்தில் பயணித்தனர். திருவாரூரில் இருந்து கடலூர் முதுநகர் வரை ரயில் மின் இன்ஜின் இயக்கப்பட்ட நிலையில் பின்னர் சம்பந்தப்பட்ட இன்ஜின் விழுப்புரம் வரை சென்றது. மேலும் வருகிற பிப்ரவரி 3, 4ம் தேதிகளில் ரயில்வே உயரதிகாரிகள் மேற்கண்ட பாதைகளில் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுத்த பிறகு திருவாரூரிலிருந்து கடலூருக்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : train test run ,Thiruvarur ,Cuddalore ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...