×

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, ஜன. 28: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19ல் மெயின் பஜாரில் உள்ள இந்தியன் வங்கி எதிரே அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் 11வது ஊதிய ஒப்பந்தம், நிலுவை பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் ஊதிய உயர்வு வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, புதிய ஓய்வூதிய  திட்டத்தை கைவிடுதல், குடும்ப ஓய்வூதியத்தில் மாற்றங்கள் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்வது என வலியுறுத்தினர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags : Bank employees ,
× RELATED 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு: மத்திய...