×

கம்பாளி அரசுப் பள்ளியில் தூய்மை இந்திய திட்டத்தில் விளையாட்டு மைதானம் ‘பளிச்’

திருச்சுழி, ஜன.28: திருச்சுழி அருகே அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை துப்புரவு பணியில் ஈடுபட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தினர் சுத்தம் செய்தனர். திருச்சுழி அருகே உள்ள கம்பாளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் மாணவர்கள் விளையாட முடியாத நிலையில் இருந்தது. இந்த விளையாட்டு மைதானத்தை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா, கம்பாளி கிராமத்தைச் சேர்ந்த எஎஸ்கே இளைஞர் மன்றம் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் மற்றும் பள்ளி துணை தலைமையாசிரியர் கருணாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தூய்மை பணியில் தேசிய இளையோர் சேவைத்தொண்டர்கள் ஸ்ரீராம், சத்தியமூர்த்தி, கௌசல்யா மற்றும் கம்பாளி ராமலிங்கம் மற்றும் இளையோர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கம்பாளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தேசிய பெண்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Tags : Playground 'Pulich ,Kambali Government School ,
× RELATED சக்ரா ஆசனத்தில் 50 மீட்டர் காரை கயிற்றால் இழுத்து மாணவன் உலக சாதனை