×

சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் முதன்முதலில் பெண் ஒன்றியக்குழு தலைவர் தேசியக் கொடி ஏற்றினார் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு

சீர்காழி, ஜன.27: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முதன்முறையாக பெண் ஒன்றியக்குழு தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, அவரது தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றியகுழு தலைவராக ஒரு பெண் இருந்ததில்லை. முதன்முறையாக நடந்து முடிந்த ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் கமலஜோதி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல் ஒன்றியக்குழு தலைவர் என்ற பெருமை கமலஜோதிக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி தலைமை வகித்தார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், மேலாளர் சசிகுமார், பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பேசினார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் ரவி, விஜேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராம இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சுகுமார், உஷா நந்தினி, ஜான்சிராணி விசாகர், ரிமா, ஆனந்தி, நடராஜன், தென்னரசு, அறிவழகன், நிலவழகி, வள்ளி, விஜயகுமார் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : woman union leader ,Syrian Union ,
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது